×

கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மகேந்திரா நெல் ரகம் ₹1,629க்கு விற்பனை

கலவை : கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மகேந்திரா நெல் ரகம் ₹1,629க்கு விற்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலத்தில் விளையும் நெல் மற்றும் பல்வேறு தானியங்களை கொண்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று கலவை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மகேந்திரா நெல் ரகம் அதிகபட்ச விலையாக ₹1,629க்கு விற்பனையானது. நேற்றைய நெல் ரகங்களின் விலை பட்டியல்: கோ 51 அதிகபட்ச விலை ₹1,388, குறைந்தபட்ச விலை ₹1,269, ஏடி 37 குண்டு நெல் ரகம் அதிகபட்ச விலை ₹1,473, குறைந்தபட்ச விலை ₹1,439, மகேந்திரா நெல் ரகம் அதிகபட்ச விலை ₹1,629, குறைந்தபட்ச விலை ₹1,555. வாரத்தின் கடைசி நாளான நேற்று ஒரேநாளில் 900 நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன என்று கண்காணிப்பாளர் மதன்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

The post கலவை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மகேந்திரா நெல் ரகம் ₹1,629க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Mixer Regulatory ,Ranipetta District ,Dinakaran ,
× RELATED அழகுக்கு மெருகேற்றும் வளையல்கள்!